சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்கள் – ஒரு பார்வை
மாதங்கியின் இரு நூல்கள
To trace the history of Singapore Tamil literature, one has to start from the period when Singapore was part of the Federation of Malaya. Tamil literature in Singapore gained momentum only after the country’s independence in 1965.
In the early 1900s when Tamil literature was in its infancy, writers were predominantly males. There were only a few female writers. One of them was Usha Nair, who started writing in 1948, and another was Kamatchi Arumugam (originally from Ipoh, Malaysia), who wrote from 1949 onwards. We can acknowledge them as the first Singapore Tamil female pioneer writers.
When the daily newspaper, Tamil Murasu, was launched in 1935, there were many opportunities for people of all ages to demonstrate their talents. Tamil Murasu ran monthly short story writing competitions, students’ creative sections, literary competitions, story writing workshops, literary appreciation workshops and much more, which kindled the aspirations of local literary enthusiasts. With this encouragement, Singapore women writers like Kamala Durai, Letchumi Rajakrishnan, Vedamani George, Selvi, S. Sridevi and A. Parvathi were spurred on to take an active interest in writing.
In the 1980s and 1990s, more Singaporeans as well as expatriates started contributing to the literary world. The first Tamil female writer to have her book published (Vasanthathin Vasalile, a collection of short stories, 1984) was Sankari Ramanujam. Today, we see many publications written by various prolific female writers, with the younger generation making themselves heard across digital platforms. Their writings portray the essence of day-to-day life with characters that we come across in our daily lives. This article introduces Kamaladevi Aravindan, Jeyanthi Sankar, Nurjahan Sulaiman, Mathangi, Latha and Suriya Rethnna who are all very active in the Singapore literary scene today.
Kamaladevi Aravindan is a bilingual author who writes in Malayaalam and Tamil. She has written short stories for Tamil Murasu and for newspapers in Malaysia. She has written many novels, radio and TV plays, as well as articles for various reputed Tamil and Malayalam magazines published in Singapore and overseas.
Kamaladevi is a three-time winner in the short story competitions conducted by Tamil Nesan, a Malaysian daily, and has won several prizes in radio drama competitions held in Malaysia. She was bestowed the prestigious Karikalan award for her novel Nuval in 2012. This annual award is organised by Musthafa Tamil Trust, Singapore.
Jeyanthi Sankar, a permanent resident of Singapore, has been writing since 1995. She has written many short stories, essays and novels. She has received numerous awards and accolades for her works in Singapore and India. Her works have been translated into English and other Indian languages. Her book Naalegal Dollar was recommended for the Read! Singapore campaign by the National Library Board in 2006. She received the prestigious Karikalan award for her novel Thirinthalaiyum Thinaigal in 2013.
Nurjahan Sulaiman was born in Singapore. In spite of a childhood mired in poverty, she developed an interest in Tamil literature and has been writing since 1966. Her first book of poetry Uyir Nilavu was published in 2011 and she was also the first Muslim woman in Singapore to publish a book of poems. Since then she has published two novels. Her writings are based on real life situations and her characters depict the sufferings of people from all walks of life.
Mathangi is one of Singapore’s up-and-coming Tamil writers and her works have been published in newspapers, magazines and literary websites in Singapore, Malaysia and India. She is an active participant in many of the literary events organised by organisations promoting Tamil literature. Her short stories and poems are reflections of Singapore and its people.
Kanagalatha (Latha) is currently the Sunday editor of Tamil Murasu. She has published two collections of poetry in Tamil: Theeveli (Firespace) (2003), and Paampu Kaattil Oru Thaazhai (A Screwpine in a Snake Forest) (2004). She also published a short story collection titled Naan Kolai Seiyum Pengal (Women I Murder) in 2007, which won the biennial Singapore Literature Prize in 2008. Her poems and short stories have been published in Words, Home and Nation (1995), a multilingual anthology published by The Centre for the Arts, National University of Singapore; Rhythms, a Singaporean Millennial Anthology of Poetry, published by the National Arts Council (2000); Fifty on 50 and Tumasik published by the National Arts Council (2009); and various Tamil literary journals in India, Malaysia, Sri Lanka and France. Her works have been translated into English, French and German.
Her bilingual poem “Still Human”, Poems on the Move series was featured on MRT trains by the National Arts Council (1996), and Karanguni was displayed in the MOVING WORDS 2011 showcasing Singaporean literature on the MRT network by The Literary Centre (2011).
Suriya Rethnna, a former school teacher, has written for Singaporean and Malaysian Tamil newspapers, as well as for local radio and television stations. Her works include fiction, non-fiction, plays and translated works. She has won several competitions in Singapore and Malaysia, and was awarded the Montblanc-NUS-CFA Young Writers’ Fellowship in 1998. Her first novel Merkkey Uthikkum Sooriyan (The Sun Rises in the West), published in 1989, was the first Tamil novel published by a female writer in Singapore.
சிங்கப்பூரில் ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் ஆகிய நான்கு அதிகாரத்துவ மொழிகளிலும் இலக்கியங்கள் தோன்றி வளர்ந்த விதத்தை வரலாற்றுப் பூர்வமாக ஆராய முற்படும்போது மலாயாவிலிருந்துதான் அவ்வரலாற்றை நாம் தொடர வேண்டியுள்ளது. 1965க்குப் பிறகுதான் சிங்கப்பூர் இலக்கியத்திற்கு ஒரு தனிப்பட்ட வரலாறு அமைகிறது.
19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ் இலக்கியம் வேர்விடத் தொடங்கிருந்தாலும் ஆண்களே படைப்பிலக்கியத் துறையில் அதிகம் பங்காற்றினர். பத்திரிகைகளுக்கு எழுதிய பெண்கள் மிகச் சிறுபான்மையினரே. உஷா நாயர் என்பவர் 1948 முதற்கொண்டும், திருமதி காமாட்சி ஆறுமுகம் (ஈப்போ) 1949 முதற்கொண்டும் எழுதி வந்துள்ளனர். மலாயாவில் ஐம்பதுக்கு முன்னர் எழுதத் தொடங்கிய இவர்களைப் பெண் எழுத்தாளர்களின் முன்னோடிகள் என்பதில் தவறில்லை.
திருமதி கமலாதுரை சிங்கப்பூர் வானொலியில் பெண் எழுத்தாளர்களுக்கெனச் சிறுகதைகளை வாசிக்கும் தனியோர் நிகழ்ச்சியைப் படைத்ததோடு மட்டுமல்லாமல் அறுபதுகளில் தமிழ் முரசில் சிறுகதைகள் படைத்தவர். எழுபதுகளிலும் எண்பதுகளிலும் தமிழ் முரசில் கதைகள் படைத்துச் சிறுகதை வரலாற்றில் தனக்கென ஓர் இடம் பெறுபவர் லட்சுமி ராதாகிருஷ்ணன் ஆவார்.
தமிழ்முரசு நடத்திய மாதாந்திரச் சிறுகதைப் போட்டிகள், மாணவர் மணிமன்றம், தமிழர் திருநாள் இலக்கியப் போட்டிகள், கதை வகுப்பு, ரசனைவகுப்பு போன்றவை ஏற்படுத்திய இலக்கிய எழுச்சி காரணமாகவும் திருமதி வேதமணி ஜார்ஜ், செல்வி, எஸ். ஸ்ரீதேவி, அ. பார்வதி போன்ற பெண்கள் எழுத்துத்துறையில் தடம் பதித்தனர்.
எண்பதுகளில் உள்ளூரில் பிறந்து வளர்ந்த படைப்பாளிகளாகவும், இங்கேயே வேரூன்றிய எழுத்தாளர்களாகவும் சிறுகதைத் துறையில் முனைப்புக் காட்டியவர்கள் சூர்ய ரத்னா, பால மலர், இலட்சுமி தனகோபால், கண்ணம்மா, நூர்ஜஹான் சுலைமான், லதா, கல்பனா கலியபெருமாள், பிரபாவதி தாஸ், இலட்சுமி இராதாகிருஷ்ணன், முத்துலட்சுமி கருப்பையா போன்றோர். முதன்முதலில் நூல் வெளியிட்ட பெண் எழுத்தாளர் என்ற பெருமை அமரர் சங்கரி இராமானுஜம் அவர்களையே சேரும். அவருடைய வசந்தத்தின் வாசலிலே என்ற சிறுகதைத் தொகுப்பு நூல், 1984 இல் வெளிவந்தது.
இன்று பலர் எழுத்துத் துறையில் தங்கள் திறமையை வெளிகொணர்கின்றனர். கல்வியிலும் பொருளாதாரத்திலும் மேம்பட்டுள்ளதால், தங்கள் படைப்புகளை புத்தகமாகவும் பலர் வெளியிட்டுள்ளனர். தகவல் தொழில்நுட்பம் முன்னேறிய இக்காலகட்டத்தில் பலரும் மின் வலைதளங்களிலும் தங்கள் படைப்புகளை வெளியிடுகின்றனர். அவர்களுள் சிலரை இக்கட்டுரையில் காணலாம்.
திருமதி கமலா தேவி அரவிந்தன் (Kamaladevi Aravindan)
கமலாதேவி அரவிந்தன் (Kamaladevi Aravindan) - தமிழ், மலையாள எழுத்தாளர், நாடக ஆசிரியர், விமர்சகர், ஆய்வுக்கட்டுரையாளர், நூலாசிரியர்.
கமலாதேவி அரவிந்தன் பிறப்பால் மலையாளி எனினும் தமிழ்பால் தணியாத காதல் கொண்டவர். மிக இளம் வயதிலேயே எழுத ஆரம்பித்து இன்று வரை எழுதி வருபவர். தம் தாய்மொழியான மலையாளத்திலும் தமிழிலும், ஏறக்குறைய 120 சிறுகதைகள், 18 தொடர்கதைகள், 142 வானொலி நாடகங்கள், 100க்கும் மேற்பட்ட இலக்கியக் கட்டுரைகள் எழுதியுள்ளார். தமிழிலும் மலையாளத்திலும் 22 மேடை நாடகங்களை எழுதி இயக்கியுள்ளார். சிங்கையில், மலையாளத்தில் முழு நீள ஆய்வு நாடகம் எழுதி இயக்கிய முதல் பெண் எழுத்தாளர் இவர். மலையாள நாடகத்துறையில் விருதுகளையும் சவால் கிண்ணங்களையும் இவர் பெற்றிருக்கிறார். தமிழ்நேசன் நடத்திய சிறுகதைப் போட்டியில் மும்முறை முதல் பரிசு பெற்றிருக்கிறார். தமிழ் மலரில் ஏழு முறை இவரின் சிறுகதைகள் சிறப்புச் சிறுகதையாக வெளிவந்துள்ளன. மலேசிய வானொலி நடத்திய நாடகப் போட்டிகளில் பலமுறை முதல் பரிசு பெற்றுள்ளார். தமிழ்நாடு, கேரளப் பல்கலைக்கழகங்களில் ஆய்வுக்கட்டுரைகள் படைத்துள்ளார். தமிழ், மலையாளம், என இரண்டு மொழிகளிலும் சிறந்த இலக்கியங்களை மொழி பெயர்த்துள்ளார். சிங்கப்பூரின் தமிழ் படைப்பிலக்கிய உலகில் பெயர் பதித்துள்ள முக்கியமான எழுத்தாளர்.
சமூகத்தில் வலுவிழந்தோர் படும் இன்னல்களை அப்படியே படம் பிடித்து, கதை மாந்தர்களின் மொழியில் அவருக்கே உரிய தனித்துவம் பெற்ற பாணியில் எழுதும் இவரின் எழுத்து அக்கால வாசகர்களையும் இக்கால வாசகர்களையும் கவர்கிறது எனக் கூறலாம். இதற்குக் காரணம் இவரின் எழுத்தில் புத்தாக்கச் சிந்தனையும், உண்மைச் சம்பவங்களின் பாதிப்பும் பொதிந்திருக்கும.
ஜெயந்தி சங்கர் (Jeyanthi Sankar)
ஜெயந்தி சங்கர் (Jeyanthi Sankar) - சிறுகதை , நெடுங்கதை , கட்டுரை, பு த ினம் மற்றும் மொழிபெயர்ப்பு நூல் படைப்பாளர்.
ஜெயந்தி சங்கர் தன் வாழ்விடத் தின் இருப்பையும் வாழ்வையும் சிறுகதைகளாகவும் நெடும்புனைவுகளாகவும் எழுதுவதன் மூலம் அவற்றை உலக அனுபவங்களாக்குவார். எளிய நிகழ்வுகளையும் உலக வாழ்வின் அனுபவமாக உணர வைப்பதே இவரது எழுத்தின் வெற்றி எனலாம். தனது சூழலையும் சமூகத்தையும் துருவி ஆராய்ந்து புனைவுகளாக சிருஷ்டி க்கும் இவரின் ஆற்றலானது உலகளாவிய தமிழிலக்கியப் பெருந்திரையில் ஒரு நிரந்தர இடத்தைப் பொறித்து வருகிறது.
மதுரையில் பிறந்த இவர் 1990 முதல் சிங்கப்பூரில் பொறியாளரான கணவர் மற்றும் இரு மகன்களுடன் வசித்து வருகிறார். எழுத்து தவிர இசையிலும் இவருக்கு ஆர்வமுண்டு. ஓர் எழுத்தாளராகத் தான் உருவாக முக்கிய காரணம் தனது தொடர்ந்த வாசிப்பும் அதற்கு உறுதுணையாக அமைந்த சிங்கப்பூரின் நூலகங்களுமே என்கிறார்.
எளிய எதார்த்த நடையில் எழுதும் இவர் சீனக் கலாசாரத்தின் மீது தனி ஆர்வத்தினை வளர்த்துக் கொண்டிருக்கிறார். நிறைய சிறுகதை, கட்டுரை, குறுநாவல் மற்றும் நாவல் போன்றவற்றை எழுதியுள்ள இவர் ஏராளமான பரிசுகள் வாங்கியுள்ளார். உலகளாவிய வாசகர்களைப் பெற்ற இவர் சிங்கப்பூரைக் களமாகக் கொண்ட இவரின் புனைவுகளுக்காகப் பரவலாக அறியப் பெறுபவர். நாலேகால் டாலர், முடிவிலும் ஒன்று தொடரலாம், ஏழாம் சுவை, பெருஞ்சுவருக்குப் பின்னே, பின் சீட், வாழ்ந்து பார்க்கலாம் வா, நியாயங்கள் பொதுவானவை, சிங்கப்பூர் வாங்க என நீள்கிறது இவருடைய படைப்புகளின் வரிசை. இதுவரை இவர் வெளியிட்டுள்ளவை ஆறு சிறுகதைத் தொகுதிகள், ஒரு குறுநாவல், ஐந்துபுதினங்கள், ஆறு கட்டுரைத் தொகுதிகள் மற்றும் நான்கு மொழிபெயர்ப்புகள் ஆகியன. இவரின் ஒவ்வொரு நூலும் ஒவ்வொரு வகையில் கவனிக்கத் தகுந்தவை. சிங்கப்பூரின் தமிழ் இலக்கியத்தின் பக்கம் உலகத் தமிழர்களின் பார்வையைத் திருப்பக்கூடியவை. தமிழ்க்கொடி 2006 என்ற ஆழி பதிப்பகத்தின் ஆண்டு மலர் போன்ற பல்வேறு நூல்களிலும் இவரது கட்டுரைகள் வெளியாகியுள்ளன.
தமிழ் முரசு, முன்பிருந்த சிங்கை எக்ஸ்பிரஸ், சிங்கைச் சுடர் போன்றவை அவரின் எழுத்துச் சோதனைகளுக்கு நல்ல தளங்களாயின. திண்ணை, திசைகள் தவிர சமாச்சார், இ-சங்கமம், தமிழோவியம், தட்ஸ் தமிழ், பதிவுகள் நிலாச்சாரல் போன்ற மின்னிதழ்களிலும் இவரின் சிறுகதைகள், கட்டுரைகள் பிரசுரிக்கப் பட்டுள்ளன. இவரின் எழுத்துகள் சிங்கப்பூர் வாழ்வியலையும் அதன் பின்புலத்தையும் சார்ந்ததாகும். சமூகப் பிரச்சனைகள், பெண்கள் சார்ந்த நிகழ்வுகள், மனதை நெருடவைக்கும் நிகழ்வுகள் ஆகியன இவர் கதைகளின் கருப்பொருள்களாகும். 2006 - சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் வருடாந்திர வாசிப்போம் சிங்கப்பூர் இயக்கத்தில் related reading பிரிவில் நாலேகால் டாலர் சிறுகதைத் தொகுப்பு வாசகர்களுக்குப் பரிந்துரைக்கப் பட்டது. இலக்கிய உலகுக்கு இவர் ஆற்றும் பணியினைச் சிறப்பிக்கும் விதமாக 2013ஆம் ஆண்டு இவரின் திரிந்தலையும் திணைகள் நூலுக்கு கரிகாலன் விருது வழங்கப்பட்டது.
நூர்ஜஹான் சுலைமான் (Nurjahan Sulaiman)
நூர்ஜஹான் சுலைமான் (Nurjahan Sulaiman) - கவிஞர், சிறுகதை மற்றும் நாவலாசிரியர.
சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த நூர்ஜஹான் சுலைமானின் இலக்கியப் பயணம் 1966 ஆம் ஆண்டு வானொலியில் ஒலிபரப்பான அவரது முதல் கட்டுரையுடன் தொடங்கியது. கவிதை, சிறுகதை, கட்டுரை, நாடகம், எனப் பல தளங்களில் இயங்கிவரும் நூர்ஜஹான் சுலைமான் ஜஹாக் பீவி என்னும் புனைபெயரிலும் எழுதிவருகிறார். சிங்கப்பூர்த் தமிழ் முரசநாளிதலும், வானொலியும் இவரது இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றியுள்ளன. உயிர் நிலவு என்ற கவிதைத் தொகுப்பினை 2011 இல் வெளியிட்டு சிங்கப்பூரில் கவிதை நூல் வெளியிட்ட முதல் முஸ்லீம் இனப் பெண் படைப்பாளி என்ற பெருமை பெருகிறார்.
எல்லோருக்கும் புரியும் எளிய மொழியில் தமது வாழ்வின் அனுபவத்தையே கவிதையாகவும் கதைகளாகவும் வடித்துள்ளார். நூர்ஜஹான் தனது இளமைக் காலக் கனவுகளை மிகுந்த சிரமங்களுக்கு இடையில் தொடர்ந்தாலும், தமிழ் மீது கொண்ட காதல் குறையவில்லை. அதன் தாக்கத்தை இவரின் படைப்புகளில் காணலாம். இவரின் உயிர் நிலவு அதற்கு ஒர் உதாரணம்.
மற்றொரு வெளியீடான பொழுது புலருமா என்ற நாவலில் காதலை மையப்படுத்தியுள்ளார். உடல் சார்பற்ற, – மனத்தளவில் ஒன்றிய, காலவெள்ளத்தையும் கடந்து நிற்கும் ஒரு தெய்கக்வீ காதல் கதையை கருப்பொருளாக்கிச் சிறப்பாகப் படைத்துள்ளார். வேர்கள் என்ற இவரது நாவலில் குடும்ப உறவுகளின் மேன்மையைச் சித்திரித்துள்ளார். புலம்பெயர்ந்த தமிழர்களின் பூர்கவீ ப் பூமியான தமிழ்நாட்டில் தொடங்கி சிங்கப்பூர், தமிழ்நாடு என மாறி மாறித் தன் வேர்களை விரிக்கிறது. சராசரி வாழ்வில் பழகிப்போன சாமானியர் ஒருவரின் வாழ்க்கைச் சம்பவங்களையும் உறவுகளும் நட்புகளும் அவரது வாழ்க்கையில் உண்டாக்கிய சுகங்களையும் சோகங்களையும் எளிய நடையில் நாவலாக்கியுள்ளார். இதில் பத்து விழுக்காடு மட்டுமே கற்பனை. மீதி 90 விழுக்காடு உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் வரையப்பட்டவை.
மாதங்கி (Mathangi)
புதிய தலைமுறை சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்களுள் குறுகிய காலத்தில் பெரிய அளவில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருப்பவர் மாதங்கி. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மாதங்கி 1993 ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் தம் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். படிக்கும் காலத்திலேயே எழுதத் துவங்கினாலும் இவரின் சிறுகதை முதலில் பிரசுரமானது 1988 ஆம் ஆண்டு சுமங்கலி என்ற இதழில்தான். பின் சிங்கையில்தான் இவரின் இலக்கிய வேட்கை தீவிரமடைந்தது எனச் சொல்லலாம். இவர் எழுதிய கதைகள், கவிதைகள் தமிழ் நாட்டு இதழ்களிலும், பத்திரிகைகளிலும் சிங்கைத் தமிழ் முரசு, மலேசிய தமிழ் நேசன் நாழிதழ்களிலும், திண்ணை போன்ற மின் இதழ்களிலும் வெளிவந்துள்ளன.
கடந்த 25 ஆண்டுகளாக கனமான வாசிப்பிலும் சீரான படைப்பெழுத்துத் துறையிலும் ஈடுபட்டிருக்கும் மாதங்கி, சிங்கப்பூர் வாசகர் வட்டம், கவிச்சோலை, கவிமாலை, தங்கமீன் வாசகர் சந்திப்புக் கூட்டம் முதலானவை நடத்தும் மாதாந்திர இலக்கிய நிகழ்வுகளிலும் பங்கேற்றுத் தம் படைப்புத் திறனை வெளியிட்டு வருகிறார். பல பரிசுகளையும் வென்றுள்ளார்.
ஒருகோடி டாலர்கள் என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம்பெறும் மாந்தர்கள் குழந்தைகளாக, பதின்மவயதினராக, வேலை செய்யும் தம்பதியராக, இல்லத்தரசிகளாக, மாமியார்களாக, உடன் பிறந்தவர்களாக, மூத்தகுடும்ப உறுப்பினர்களாக, திருநங்கையராக இயங்குகிறார்கள். இவர்கள் சிங்கப்பூரில் குடியேறிப் பெரும்பாலும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் அடுக்குமாடி வீடுகளில் வசிக்கிறார்கள். இவர்களின் பிரச்சினைகளை அலசி ஆராய்கிறது இத்தொகுப்பு. இவரின் மற்றொரு படைப்பான நாளை பிறந்து இன்று வந்தவள் என்ற கவிதை நூலில் பலமொழிக் கலாசாரம் கொண்ட சிங்கப்பூரில் வாழும் தமிழர்களின் சுய அடையாளங்களை மிக நேரடியாக எளிய மொழியில் கவிதைகளாக வடித்துள்ளார்.
லதா (Latha)
லதா (Latha) - கவிதை, புதினம், சிறுகதை மற்றும் கட்டுரைப் படைப்பாளர்.
இலங்கையில் நீர்கொழும்பில் பிறந்த லதா 1982 இல் குடும்பத்துடன் சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்தார். இருபது ஆண்டுகளாக சிங்கப்பூர் தமிழ் முரசு பத்திரிகையில் செய்தி ஆசிரியராகப் பணியாற்றும் இவர் தீவெளி (கவிதைகள் 2003), பாம்புக் காட்டில் ஒரு தாழை (கவிதைகள் 2004) என்ற இரு கவிதைத் தொகுதிகளையும் நான் கொலை செய்யும் பெண்கள் என்ற சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். நான் கொலை செய்யும் பெண்கள் நூலுக்கு 2008 ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூர் இலக்கிய விருது வழங்கப்பட்டது. லதாவின் கவிதைகள் மற்றும் சிறுகதைகள் கணையாழி, காலச்சுவடு, உயிர்நிழல், குங்குமம் போன்ற இதழ்களிலும் வல்லினம், தங்கமீன் போன்ற மின்னிதழ்களிலும் வெளிவந்துள்ளன. இவரது தீவெளி நூல் தமிழ்நாடு பெரியார் பல்கலைக்கழகத்தின் இலக்கியப் பாடத் திட்டத்தில் சேர்கக்ப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தேசியக் கலைகள் மன்றம் தொகுத்த நூற்றாண்டுக்கால சிங்கப்பூர்க் கவிதைகள் பன்மொழித் தொகுப்பிலும், கனவும் விடிவும் என்ற இந்திய சாகித்திய அகாதமி வெளியிட்ட தற்காலத் தமிழ்ப் பெண் கவிஞர்கள் தொகுப்பிலும் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன.
சூர்ய ரத்னா (Suriya Rethnna)
சூர்ய ரத்னா (Suriya Rethnna) - புதினம், நாடகம், மொழிபெயர்ப்பு நூல், கட்டுரை மற்றும் சிறுவர் இலக்கியப் படைப்பாளர்.
சிங்கப்பூரிலேயே பிறந்து வளர்ந்த மூனறாவது தலைமுறையைச் சேர்ந்த சூர்ய ரத்னா ஒரு முன்னாள் ஆசிரியை. 1986லிருந்து உள்ளூர் மலேசியத் தமிழ் பத்திரிக்கைகளுக்கும், உள்ளூர் வானொலி தொலைக்காட்சி நிலையங்களுக்கும் எழுதி வருகிறார். சில நாடகங்களில் நடித்தும் இருக்கிறார். கதை கட்டுரை போட்டிகளில் இவருடைய படைப்புகளுக்குப் பரிசுகள் கிடைத்ததோடு 1998 ஆம் ஆண்டில் Montblanc-NUS CFA இளைய எழுத்தாளர் அங்கீகாரத்தையும் பெற்றார். புதினம், புதினம் அல்லாத எழுத்துக்கள், நாடகம், மொழி பெயர்ப்பு நூல்கள் போன்றவை அவரது படைப்புகளில் அடங்கும். மேற்கே உதிக்கும் சூரியன் என்ற தனது முதல் நாவல் மூலம் சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்களிலேயே முதலில் நாவல் பதிப்பித்தவர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
தேசிய கலைகள் மன்றத்தின் (NAC) மானியம்பெற்று வெளிவந்த இவரின் குழந்தைக் கதைகள் பாலர் பள்ளிகளிலும் தொடக்கநிலைப் பள்ளிகளிலும் விரும்பி வாங்கப்பட்டன. 2005இல் சிங்கை தமிழ் பத்திரிக்கையான தமிழ் முரசில் வெளிவந்த சொல்லத்தான் நினைக்கிறேன் என்ற சிறுகதை, இளைஞர்களுக்கான அறிவியல் புனைகதை என்னும் பிரிவில் இவர் காட்டிய முதல் முயற்சியாகும்.
தங்கமீன் பதிப்பகத்தின் வெளியீடான சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளில் இவருடைய முகமூடி என்ற கதையும் பிரசுரிக்கப்பட்டுள்ளது. தங்கமீன் மின்னிதழில் உண்மையைப் போன்ற கதைகள் என்ற அடைமொழியோடு வெளிவந்த 15 சிறுகதைகளைத் தொகுத்து நான் என்ற புத்தகமாக வெளியிட்டுள்ளார். இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள இறைவனின் குழந்தை என்ற கதை 2013 ஆம் ஆண்டில் தேசிய நூலக வாரியத்தின் வாசிப்போம் சிங்கப்பூர் இயக்கத்திற்குத் தேர்வு செய்யப்பட்டத.
சூர்ய ரத்னா எழுதிய ‘நான்’ சிறுகதைத் தொகுப்ப.
Sundari Balasubramaniam is a Librarian with the National Library’s Content and Services division. Her responsibilities include managing and developing content as well as providing reference and research services. She also manages the Tamil collection at the Lee Kong Chian Reference Library.
மேற்கோள் குறிப்பு்கள்
முனவைர் எம் எஸ் லக்ஷ்மி. சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்களின் பங்களிப்பு. Retrieved March 5, 2014, from http://www.kalachuvadu.com/issue-60/ page24.asp
கமலாதேவி அரவிந்தன். Retrieved March 5, 2014, from http://www.sirukathaigal.com/ சிவ குணாளன் (2011, May 24). கமலாதேவி அரவிந்தனிடம் ஓர் நேர்காணல். [Web log post]. Retrieved March 5, 2014, from http://kamalagaanam.blogspot.sg/
ஜெயந்தி சங்கர். [Web log post]. Retrieved March 5, 2014, from http://jeyanthisankar.blogspot.sg/
ஜெயந்தி சங்கரின் படைப்புகள். Retrieved March 5, 2014, from http://www.tamiloviam.com/unicode/authorpage.asp?authorID=jayanthi
Karikalan Awards (Dec 15, 2013). Retrieved March 5, 2014, from http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/two-tamil-writers-from-singapore-malaysiapresented-karikalan-awards/article5461703.ece
ஜெயந்தி சங்கரின் படைப்புகள். Retrieved March 5, 2014. (myLibrary ID is required to access this ebook)
ஆதித்யா. (2011). உயிர் நிலவு: கவிஞர் நூர்ஜஹான் சுலைமான்னின் நூல்வெளியீட்டு விழா (e magazine) Retrieved March 5, 2014, from (http://www.thangameen.com/Archieves/contentdetails.aspx?tid=285&iid=35 தங்கமீன் வாசகர் வட்டம் நேர்காணல் எழுத்தாளர் மாதங்கி (e magazine). Retrieved March 5, 2014, from http://www.thangameen.com/ContentDetails.aspx?tid=734
சுப்ரபாரதிமணியன் பெரிதினும் பெரிது கேள் – மாதங்கியின் “ஒரு கோடி டாலர்கள” – சிறுகதைத் தொகுதி (e magazine) Retrieved March 5, 2014, from http://www.sandhyapublications.com/review.aspx
நேர்காணல் (இதழ் 7, 2009). படைப்பிலக்கியத்தில் அடயதாளத்தை முன்னிலைப்படுத்துவது ஒருவைக வியாபாரம் (e magazine). Retrieved March 5, 2014, from http://vallinam.com.my/jan09/interview.html
இராம கண்ணபிரான் (ஆஉக 29, 2013). சிங்கப்பூர்த் தமிழ் சிறுகதைகள் (e magazine) Retrieved March 5, 2014, http://singaporecliche.com
பாலு மணிமாறன். (2007). வேறொரு மனவெளி சிங்கப்பூர் தங்கமீன் பதிப்பகம். சிங்கப்பூர்: தங்கமீன் பதிப்பகம். (Call no.: Tamil RSING S894.811372 VER)